புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

ஜோர்தான் மன்னருடன் ஜனாதிபதி மகிந்த கலந்துரையாடல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜோர்தான் மன்னர் அப்துல்லா இரண்டாம் இபின் அல் ஹுசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.நேற்று மதியம் அம்மனில் உள்ள றோயல் ஹஷேமைட் நீதிமன்றத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தலைவர்களும் இரு நாடுகளுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் 2007ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இரு நாட்டுத் தலைவர்களும் பன்முக பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென வலுவான உறுதியெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கு வருமாறு ஜோர்தான் மன்னருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோர்தான் மன்னருக்கும் ஜனாதிபதி மகிந்தவுக்குமிடையில் இச்சந்திப்பு மூன்றாவது தடவையாகும்.
இறுதிச் சந்திப்பு கடந்த 2009ம் ஆண்டு, ஜோர்தானில் இடம்பெற்ற G-11 மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ள சென்றிருந்தபோது இடம்பெற்றிருந்தது.
மேலும் இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் கலாசார மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இச்சந்திப்பின்போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் டி வாஸ் குணவர்தன, கமலா ரணதுங்க, ரொசான் ரணசிங்க,ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜோர்தானுக்கான இலங்கைத் துதர் காமினி ராஜபக்ச ஆகியொர் கலந்து கொண்டனர்.
இலங்கை தற்போது ஜோர்டானுக்கு தேயிலை இறக்குமதி செய்யும் நாடாகும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெருமளவான தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவற்றில் 80 வீதம் ஜோர்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ad

ad