புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2014

நிஷா தேசாய் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு- இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் இல்லை என்கிறார் நிஷா
இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்ஸை அவரது அமைச்சில் சந்தித்தார்.இங்கு கருத்து வெளியிட்ட பிஸ்வால்,
சர்வதேச சமூகத்தில் வளர்ந்து வரும் அதிருப்தி காரணமாக மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் முன்னோக்கி கொண்டு செல்ல வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை இலங்கை இழந்து விடுமோ என்ற அச்சம் உள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடான அமெரிக்காவின் செயற்பாடுகள், நாட்டில் சமூகங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும் என அமைச்சர் பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் இல்லை: அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவிடம் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை என வலியுறுத்தியுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், சில பிரச்சினைகள் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறான நிலையை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது என குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
நிஷா தேசாய் பிஸ்வால், அமைச்சர் ஜீ.எல். பீரிஸை அவரது அமைச்சில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,
சர்வதேச சமூகத்தில் வளர்ந்து வரும் அதிருப்தி காரணமாக மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் முன்னோக்கி கொண்டு செல்ல வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை இலங்கை இழந்து விடுமோ என்ற அச்சம் உள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடான அமெரிக்காவின் செயற்பாடுகள், நாட்டில் சமூகங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும் என அமைச்சர் பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கை கடும் கோட்பாட்டாளர்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் உரிய முறையில் ஒப்பு நோக்கவில்லை என்ற வலுவான கருத்து உள்ளது என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர், இலங்கையின் செயல்முறைகள் தொடர வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
இலங்கையுடன் நேர்மறையாக உறவுகள் இருக்க வேண்டும் மற்றும் பல துறைகளில் இருக்கும் ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும் பிஸ்வால் வலியுறுத்தினார்.
அப்போது கருத்து வெளியிட அமைச்சர் பீரிஸ், சர்வதேச சமூகம் இலங்கை மீது கவனத்தை செலுத்த பொதுநல மற்றும் தார்மீக நெறிமுறைகள் காரணம் அல்ல எனவும் பலம், பணம் மற்றும் வாக்குகள் மூலம் இதற்கான உந்துதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள் முன்கூட்டிய நிகழ்ச்சி நிரலுடன் இலங்கைக்கு வந்து அதனை நிறுவன முயற்சித்தனர். அமெரிக்கா தனது அணுகு முறையில் சமநிலையாக செயற்படும் தேவை இருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.

ad

ad