புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
 இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்பொழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்
முதல் பளை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையான சேவை கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட பளை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன், இடையில் இருக்கும் பரந்தன் மற்றும் ஆணையிறவு ரயில் நிலையங்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டன.
பளையில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையான தூரம் 56 கிலோ மீற்றராகும். பளைக்கும் யாழ் ரயில் நிலையத்திற்கும் இடையில் 10 ரயில் நிலையங்கள் இருப்பதாகவும்  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad