புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

புதன்கிழமை ரொறன்ரோப் பெரும்பாகத்தில் பலத்த குளிர்நிலவுகின்றதன் விழைவாக ரொறன்ரோ விமான நிலையம் திரும்பவும் பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. 
குறிப்பாக இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானமாயினும், தரையிறங்கும் விமானமாயினும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. எனத் தெரியவருகிறது.
மேலும் செவ்வாயக்கிழமை அமெரிக்காவில் நிலவிய பனிப்புயல்
. கடுமையான காற்று. மிகமிகக் குறைந்தளவில் நிலவிய வெப்பநிலை போன் காரணங்களால் நியுயோக், சிக்காக்கோ, வாஷிங்டன், நியுயேர்சி போன்ற இடங்களில் இறங்கவேண்டியதோ அல்லது அங்கிருந்து புறப்படவேண்டிய விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கிட்டத்தட்ட 1, 400ற்கும் மேலான விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை அங்கு இரத்து செய்யப்பட்டிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து மொன்றியல், ஒட்டாவாவிற்கு வந்து சேரவேண்டிய விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ரொறன்ரோவில் அதீத குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உள்ளது. புதன் காலை ரொறன்ரோவின் வெப்பநிலை -22 செல்சியசாக இருந்தாலும் அதிகரித்த குளிர் காற்று வீசுவதன் காரணமாக -34 செல்சியஸ்வரையில் உணரக்கூடியதாகவிருக்கும் எனத் தெரிவி;க்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் புதன்கிழமை இரவு சில சில இடங்களில் பனிப் பொழிவு நிகழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad