புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2014

இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் மலேசிய பினாங் முதலமைச்சர் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்
மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சர் பி. இராமசாமி, பிரித்தானிய தமிழர் பேரவை இந்த மாத இறுதியில் நடத்தும் மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்காக பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.இந்த மாநாட்டின் போது தாம் இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்ற தலைப்பில் உரையாற்றப் போவதாக ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலங்கை அரசாங்கம் தமிழர்களுடைய காணிகளை சுவீகரிப்பது தொடர்பாக தாம் முக்கியத்துவம் வழங்கவுள்ளதாக இராமசாமி தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைகளின் மூலம் தமிழ் சமூகத்தின் வரலாற்று காணிகள் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்தும் தாம் குரல் கொடுக்கவுள்ளதாக இராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு  பௌத்த ஆலயங்களை அமைக்கும் செயற்பாடு அத்துடன் உடல் ரீதியாக கலாசார ரீதியாக மற்றும் பூகோள ரீதியாக தமிழர்களை பாதிப்படையும் செயல்கள் யாவும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்று இராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இரண்டு இனங்கள் இணைந்து வாழ்வது ஏற்புடையதல்ல.
எனவே தமிழர்களுக்கு சுதந்திரமான நாடு தேவை என்றும் இராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்

ad

ad