புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

ஆளும்கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் ஐ.தே.கட்சியில் இணைவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த பத்மசிறி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பத்தேகம தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பத்மசிறி, நாடு அதளபாதாளத்தில் விழுந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே நாட்டை அதில் இருந்து மீட்க முடியும் எனவும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ஒன்று தற்போது இல்லை. ஜனாதிபதி மற்றும் அவரை சூழ்ந்திருக்கும் ஒரு சிலரே இன்றைய சுதந்திரக் கட்சியினர்.
ஜனாதிபதி அன்று கட்சியினால் புறந்தள்ளப்பட்டு வந்த போது தெற்கில் தேர்தல் கூட்டங்களை கூட நடத்த அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் நானும் நோயேல் காரியவசமும் அனுசரணைகளை வழங்கி கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.
ஜனாதிபதியை அன்று கட்சியில் இருந்து ஓரங்கட்டியவர்கள் தற்பொழுது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக உள்ளனர். கட்சிக்காக உழைத்தவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கும் அதிகாரம் அந்த கட்சியின் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. எனினும் செயலாளர் பதவி என்பது ஒன்றுமில்லாத வெற்று பதவியாகியுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்து மறுநாளே வேட்புமனுவை பெறக் கூடிய நிலைமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகியுள்ளது என்றார்.

ad

ad