புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014


கட்சி தலைமையை விமர்சித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் பதிலடி

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி. டெல்லி அமைச்சரவையில் தனக்கு பதவி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், இன்று திடீரென முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கெஜ்ரிவால், ‘வியாழக்கிழமை மாலையில் கூட்டம் நடத்தினோம். அப்போது ஏன் அமைதியாக இருந்தார்? ஏதாவது பிரச்சினை இருந்தால் ஏன் அவர் பேசவில்லை? மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லியில் போட்டியிட சீட் கேட்டார் பின்னி. ஆனால், எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். கடந்த முறைகூட கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவே பின்னியின் செயல்பாடு இருந்தது' என்று கூறினார்.

இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டினா சர்மாவும் கட்சி தலைமையை விமர்சித்துள்ளார். 2013ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 2014ம் ஆண்டுக்கான தேர்தலை அறிக்கையை தயாரிக்கும் பணியில் கட்சி ஈடுபட்டுள்ளது என்று அவர் குறை கூறியுள்ளார்.  இதற்கு பதிலடி கொடுத்துள்ள கெஜ்ரிவால், “மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றும். ஆட்சி அமைத்து 10 நாட்களுக்குள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. அதற்கு இன்னும் காலம் ஆகும்' என்றார்.

ad

ad