புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொல்லப்பட்டது
 
நிலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரால் புதன்கிழமை மாலை சுட்டுக்கொல்லப்பட்டது. குந்தசப்பை என்ற இடத்தில் முதல் தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பிய புலி, இரண்டாவது தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது. 


சுட்டுக்கொல்லப்பட்ட புலி கடந்த ஜனவரி 4 முதல் நீலகிரி பகுதியில் நடமாடியதுடன், இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை கொன்றுள்ளது. மேலும் இரண்டு மாடுகளை அடித்து கொன்றுள்ளது. 

இதையடுத்து மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேவர அச்சமடைந்தனர். பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் 78 இடங்களில வீடியோ கேமராக்கள்அரசு சார்பில் புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் 18 நாட்கள் கழித்து புதன்கிழமை புலி சுட்டுக்கொல்லப்பட்டது.

புலி பீதி காரணமாக ஊட்டி அருகேயுள்ள குந்தசப்பை பகுதியில் 17 பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புலி சுட்டுக்கொல்லப்பட்டதால், 17 பள்ளிகளும் வியாழக்கிழமை முதல் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ad

ad