புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2014

ஹிருணிகாவுக்கு எதிராக பிரபலங்களை களமிறக்கும் துமிந்த சில்வா - முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? - ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை துமிந்த சில்வாவின் கோரிக்கைக்கு அமையவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக பிரபல பாடகர் நாமல் உடுகமவின் மனைவியான ருவாந்தி மங்களா கூறியுள்ளார்.
இதனடிப்படையில் ஹிருணிகாவுக்கு எதிராக ஜின்ஜர் மற்றும் ருவந்தி ஆகியோரை தேர்தலில் களமிறக்கி பிரசாரங்களை ஆரம்பித்த பின்னர், தமது குடும்ப ஊடகமான ஹிரு ஊடக வலையமைப்பின் ஊடாக பெரும் பிரசாரங்களை முன்னெடுக்க துமிந்த சில்வா தயாராகி வருகிறார்.
முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? - ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஆளும் கட்சிக்குள் பலத்த நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமான விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணது்ஙக மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு இடையில் பனிப் போர் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கு ஆதரவான பிரசாரம் செய்வதில் அமைச்சர்கள் இரண்டு தரப்பாக பிளவுப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பு மாவட்டத்திற்கே இம்முறை முதலமைச்சர் பதவி என்ற ரீதியிலான தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதேவேளை தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் நடிகை கீதா குமாரசிங்க இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக பாரிய தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ள கீதா குமாரசிங்க தான் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவது நிச்சயம் என கூறி வருகிறார்.
முதலமைச்சர் பதவியை பெறும் விடயத்தில் அரசாங்க உயர் மட்டத்தின் ஆதரவும் தனக்கு இருப்பதாக கீதா கூறி வருகிறார்.

ad

ad