புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

பங்களாதே'_டனான முதல் டெஸ்ட்:

இலங்கை அணி ஸ்திரமான நிலையில்

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி ஸ்திரமான நிலையில் உள்ளது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு
போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று மிர்புரில் ஆரம்பமானது. இதில் பங்களாதேஷ் வீரர் 'ம்ஸ{ல் ரஹ்மானுக்கு தனது கன்னி டெஸ்டில் விளையாட வாய்ப்பு கடைத்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பங்களாதேi' முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 59 ஓட்டங்களுக்கே தனது முதல் 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் ஆரம்ப வீரராக களமிறங்கிய 'ம்ஸ{ல் ரஹ்மான் 33 ஓட்டங்களை குவித்தார்.
இந்நிலையில் மத்தியவரிசையில் வந்த 'கிப் அல் ஹஸன் மற்றும் அணித்தலைவர் முஷ்பீகுர் ரஹீம்; ஆகியோர் அணியை கௌரவமான நிலைக்கு கொண்டுவந்தனர். இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் 'கிப் அல் ஹஸன் 91 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றதோடு மறுபுறத்தில் முஷ்பீகுர் ரஹீம்; 122 பந்துகளில் 61 ஓட்டங்களை குவித்தார்.
பின்னர் கடைசி வரிசையில் வந்த சொஹக் காசி 42 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் பங்களாதேஷ் அணி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை குவித்தது.
இதன்போது இலங்கை சார்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் 'மிந்த எரங்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். தவிர சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.
இந்நிலையில் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்களை பெற்றிருந்தது. திமுத் கருனாரத்ன 28 ஓட்டங்களுடனும் கவ்'ல் சில்வா 30 ஓட்டங்களு டனும் களத்தில் உள்ளனர்.
இதில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன தனிப்பட்ட காரணத்திற் காக நாடு திரும்பினார். இதனால் முதல் டெஸ்டில் டினேஷ் சந்திமாலே விக்கெட் காப்பாளராக செயற்பட்டு வருகிறார். பிரசன்ன ஜயவர்தனவுக்கு பதில் மத்திய வரிசை வீரர் கித்ருவன் விதானகே வுக்கு அணியில் இடம் கிடைத்தது.

ad

ad