புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

செவ்வாய்க்கிழமை தமிழ் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்
உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தபோது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திரைப்பட
இயக்குனர் கவுதமன், மாணவர்கள் பார்வை தாசன், கவுதம், ரேமன், கோவண சந்திரன், ஜோதிலிங்கம் மற்றும் தமிழ்இனியன் ஆகியோரை கைது செய்து போலீசார் அழைத்து சென்று தாக்கினர். பின்னர் ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி சென்னையில் இருந்து சென்றபிறகே அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வன்முறை தாக்குதல் நடத்திய நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஞானசேகரன், சூளைமேடு இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட போலீசாரை உடனடியாக சஸ்பெண்டு செய்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதை கண்டித்து மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை ஆர்வலர்கள் தலைமையில் நாளை(செவ்வாய்க்கிழமை) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.’’இவ்வாறு அவர் கூறினார். 

ad

ad