புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014


தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க.,
ஐ.ஜே.கே. கட்சிகள் உறுதியாகிவிட்டன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நரேந்திரமோடியை முன்னிறுத்தி பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
பா.ம.க.வுடன் நாளை அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடக்கிறது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் கூட்டணி உறுதியான ம.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது.
தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர்கள் பா.ஜ.க. அணிக்குள் வருவார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. அணிக்கு யார்? தலைமை என்பது கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் சமமாக கருதப்படுவார்கள்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்கள் சந்தோஷமாக வாழவும், தமிழர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈழத்தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் அதை உறுதிபடுத்த தமிழக பா.ஜ.க. மத்திய அரசை வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad