புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

    காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தில் 700 நிர்வாக மையங்களை உருவாக்க ஒமர் அப்துல்லா திட்டமிட்டிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், மாநில பொறுப்பாளருமான அம்பிகா சோனி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சைஃபுதீன் சோஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
பின்னர் இது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "" முதல்வரின் இந்த திட்டத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி பயன்பெறும் என்று அதை தடுக்கும் நோக்குடனே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஒமர் அப்துல்லா நினைக்கிறார். எனவே பதவியிலிருந்து அவர் விலக விரும்புகிறார்'' என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக ஒமர் அப்துல்லா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அவர் பதவி விலகும் பட்சத்தில் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் இணைத்து நடத்த தேசிய மாநாட்டு 

ad

ad