புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2014

கூடா நட்பு கேடாய் முடிந்தது : கல்லூரி பேராசிரியை படுகொலை
 ஈரோடு கே.கே.நகரை அடுத்த சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சரவணன்( வயது-35). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி பெயர் தீபா( வயது-29). எம்.ஈ வரை படித்தவர்.


இவர், திருச்செங்கோடு  தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அனுஷ்கா, என்ற நான்கு வயது பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11 மணியளவில், தன் வீடு அருகே உள்ள சென்னிமலை செல்லும் சாலையில் தீபா, கழுத்து அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீஸார் தீபாவின்  உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் கடைசியாக இருந்த நம்பரை எடுத்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.
இது குறித்து போலீசார், ‘’ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு வழியாக, சேலத்துக்கு ஸ்ரீராம் என்ற தனியார் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்ஸில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அரசூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீதர், வயது-23, என்பவர் கண்டக்டராக பணி செய்கிறார்.
அதே பஸ்சில், தற்போது கைதான சிவகுமாரும், அடிக்கடி பயணித்து வந்தார். இதனால், இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, இருவரும், ஓரினச்சேர்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இதே பஸ்சில், தீபாவும் பயணித்ததால், சிவகுமார் மற்றும் ஸ்ரீதருடன் பழக்கம் தீபாவுக்கும் ஏற்பட்டது. இம்மூவரும் அடிக்கடி, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், மொபைலில் பேசியும் வந்தனர்.


கடந்த, மூன்று மாதமாக, ஸ்ரீதர், தீபாவுக்கு இடையே பழக்கமும் நெருக்கமும் அதிகரித்து, சிவகுமாருடனான தொடர்பை  ஸ்ரீதரும், தீபாவும் குறைத்துக்கொண்டனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த சிவகுமார், ஒரு மாதமாக, ஸ்ரீதர் மற்றும் தீபாவிடம், தன்னுடன் மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், என்று கூறி மிரட்டி வந்தார். இதை இருவரும் ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  தீபாவை செல்போனில் தொடர்பு கொண்ட சிவகுமார், உன்னுடன் தனியாக பேச வேண்டுமென கூப்பிட்டுள்ளார். அதற்காக தன்னுடைய  ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் ஈரோடு, கே.கே.நகர் பஸ் ஸ்டாப்புக்கு வந்த தீபாவுடன் சேர்ந்து சிவகுமார் சிறிது தூரம் சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று தனியாக பேசியுள்ளனர்.


ஸ்ரீதர் உடனான நட்பு தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் தீபாவை, கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, தீபாவின் வாகனத்திலேயே சிவக்குமார் அங்கிருந்து சிவகுமார் தப்பித்து சென்றுவிட்டார்.
செல்லும் வழியில், ஸ்ரீதரை தொடர்பு கொண்ட சிவகுமார், தீபாவை கொலை செய்துவிட்டதாகவும் இனி நீ யாருடம் தொடர்பு வைத்துகொள்வாய்  என்றும் கேட்டுள்ளார்.
இதற்கிடையில், சிவகுமரின் செல்போனில் வழியிடங்களை கண்காணித்து வந்த போலீசார், ஈரோட்டை அடுத்த சோலார் செக் போஸ்ட் வழியாக வந்த சிவகுமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இக்கொலையில், மேலும் யாருக்கேனும் தொடர்பு உண்டா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

ad

ad