புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேசாய் பிஷ்­வாலின் இலங்கை விஜ­யத்­துக்கும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்­வு­க­ளுக்கும் எவ்­வி­த­ தொடர்­பு­களும் இல்லை என்று வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் கரு­ணா­தி­லக்க அமு­னு­கம தெரி­வித்தார். 
தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேசாய் சில தினங்­களில் இலங்­கைக்கு வரு­கை­த­ர­வுள்­ளமை தொடர்பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் கரு­ணா­தி­லக்க அமு­னு­கம மேலும் குறிப்­பி­டு­கையில்,
குறித்த அமெ­ரிக்க உயர் அதி­காரி அந்தப் பத­விக்கு வந்த பின்னர் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை முதற் தட­வை­யாக மேற்­கொள்­கின்றார். விடயம் அவ்­வ­ள­வுதான். இலங்­கைக்கு மட்­டு­மல்ல இப்­பி­ராந்­தி­யத்தின் பல்­வேறு நாடு­க­ளுக்கும் அவர் விஜயம் செய்­ய­வுள்ளார். அந்­த­வ­கையில் இது­வொரு வழ­மை­யான விஜ­ய­மாகும்.
இந்­நி­லையில் நிஷா தேசாய் பிஷ்­வாலின் இலங்கை விஜ­யத்­தையும் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொட­ரையும் தொடர்­பு­ப­டுத்­து­வது அவ­சி­ய­மற்­ற­தாகும்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரை பொறுத்­த­மட்டில் இலங்­கை­யா­னது சிறந்த முறையில் அதற்கு தயா­ரா­கி ­வ­ரு­கின்­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் நாங்கள் பல்­வேறு முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம் என்றார்.
மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 25வது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் 25ம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.
இம்­முறை மனித உரிமைப் பேர­வையின் 25வது கூட்டத் தொட­ருக்கு இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்ட தூதுக்­குழு கலந்­து­கொள்ளும் என அறிய முடி­கின்­றது.
ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு நாட்டின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து மதிப்­பீ­டு­களை மேற்­கொண்­டி­ருந்தார். அந்த வகை­யி­லேயே மார்ச் மாதம் 25 ம் திகதி தனது இலங்கை குறித்த அறிக்­கையை பேர­வையில் முன்­வைக்­க­வுள்ளார்.
இதே­வேளை ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யாளர் டாக்டர் சலோகா பெயானி இம்­மாத ஆரம்­பத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வடக்கில் இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்­த­துடன் மனித உரிமைப் பேர­வைக்கு அறிக்­கை­யையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.
இது இவ்­வாறு இருக்க ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக இம்­முறை கூட்டத் தொடரில் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்டால் அதற்கு எதி­ராக ஆத­ரவைத் திரட்டும் முயற்­சியில் இலங்கை ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.
மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­க­ளுக்கு அமைச்­சர்­களை அனுப்பி இலங்­கையின் முன்­னேற்ற நிலை­மைகள் குறித்து விளக்கி ஆத­ரவை திரட்டும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இரா­ஜ­தந்­திர மட்­டங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

ad

ad