புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

மதுரையில் கேங் ரேப் என்று பொய் புகார்: மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும்
சிலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் மயங்கி கிடந்தார்.


இதைத்தொடர்ந்து அவர் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்ட அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்த நர்சு என்பதும் முதலில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தெரிவித்தது தவறான தகவல் என்பதும் அதாவது அந்த பெண் மதுரை குலமங்கலம் ரோட்டில் உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் பழனியம்மாள் (வயது28) என்பதும் தவறான நடத்தையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட பழனியம்மாள், கணவர் மற்றும் 3 குழந்தை களை பிரிந்து தனியாக அந்த பகுதியில் உள்ள விழிஞ்சியம் என்ற கடற்கரை பகுதியில் மீன்வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளார்.
அப்போது அகத்தீஸ்வரத்தில் கூலி வேலைபார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் மதுரைக்கு வந்து விட்டனர்.  இதன்பின் பெற்றோர் வீட்டில் பழனியம்மாள் இருந்துள்ளார். அங்கிருந்தபடி வெளியில் சுற்றித்திரிந்துள்ளார். சம்பவத்தன்று பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்த பழனியம்மாளை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த மருது என்பவர் எம்.எம்.சி. காலனிக்கு அழைத்து வந்துள்ளார். அசாருதீன், ஈஸ்வரன், அசோக்குமார், யோகேஸ்குமார் ஆகியோருடன் சேர்ந்து பழனியம்மாள் மது குடித்துள்ளார். போதையில் ஒருவர் பின் ஒருவராக பழனியம்மாளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதன்பின்னர் செல்போனில் பழனியம்மாள் அழைத்ததன் பேரில் காதலன் பிரகாஷ், குட்டை கார்த்தி, முத்து என்ற காட்டுவாசி, வீரமணி ஆகியோர் வந்துள்ளனர். இவர்களும் மது குடித்து விட்டு பழனியம்மாளுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதன்பிறகுதான் அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்த பழனியம்மாள் அங்கிருந்து தள்ளாடியபடி சென்று முத்துப்பட்டி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார்.
இதைப்பார்த்ததும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வந்து அவரை மீட்டு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்த விவரம் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் பார்த்த போது மதுபாட்டில்கள், ஆணுறைகள் கிடந்ததை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சூரக்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவசக்தி, அய்யனார், ஏட்டுகள் முத்துப்பாண்டி, சரவணன், சுரேஷ், பாண்டி, முருகன், ஜோசப், சிவக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த முத்துப்பாண்டி, அசோக்குமார், ஈஸ்வரன் ஆகிய 3பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் மாடி விட்டு மாடி தாவி தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது சப்–இன்ஸ்பெக்டர் அய்யனாருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதில் தொடர்புடைய மருது, அசாருதீன், பிரகாஷ், கார்த்தி என்ற குட்டைக் கார்த்தி, வீரமணி, காட்டுவாசி ஆகிய 6 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

ad

ad