புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தையா? : அழகிரி ஆவேசம்
 


மு.க.அழகிரி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார்.  ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர்.   அழகிரி உருவபொம்மையை எரிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்நிலையில் மதுரையில் இன்று மாலை அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறதே?
அப்படிஎதுவும் இல்லை. என்னிடம் சமரசம் பேச திமுகவிலிருந்து யாரும் வரவில்லை.
பிறந்த நாள் அறிவிப்பு என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளீர்களே?
என் தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்து அதை அறிவிப்பேன்.
திமுகவிலிருந்து நிரந்தமாக விலகப்போவதாக பேசப்படுகிறதே?
அப்படி ஒரு முடிவு எனக்கு இல்லை.  நீங்களாக அப்படி கற்பனை செய்யாதீர்கள்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதா, திமுகவில் தற்போது நடப்பது நாடகம் என்று சொல்லி யிருக்கிறாரே?
அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு பிரதமருக்கு கலைஞர் கடிதம் அனுப்பியுள்ளாரே?
ஸ்டாலின் யாருக்காவது கெடுதல் செய்திருக்கலாம். அல்லது யாரையாவது மிரட்டியிருக்கலாம். அதனால் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்.
முன்னாள் மத்திய அமைச்சரான உங்களுக்கு ஏதும்பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா?
எனக்கு தொண்டர்கள் பாதுகாப்பே போதும்.
தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் உங்கள் உருவபொம்மையை எரித்து வருகி றார்களே?


அது ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான் என்று எப்படி கூறுகிறீர்கள்.  ஒரு வேளை அப்படி செய்திருந்தால், அதை என் பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களாக ஏற்றுக்கொள்கிறேன்.

ad

ad