புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

கருணாநிதியின் குற்றச்சாட்டு அபாண்டமானது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

கருணாநிதியின் குற்றச்சாட்டு அபாண்டமானது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
மதுரை, ஜன. 28-
தி.மு.க.வில் இருந்து தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக கட்சியின தலைவர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி விரும்பத்தகாத கருத்துக்களை கூறியதால் அழகிரி மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.


இதுபற்றி மதுரையில் இன்று அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஸ்டாலின் பற்றி நான் விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக கூறுகிறார்கள். என் மீது தலைவர் இப்படிப்பட்ட அபாண்டத்தை சுமத்துவார் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இதை அவர் எனக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்தாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தாலும் சில விளக்ககளை சொல்ல விரும்புகிறேன். 24-ம் தேதி காலையில் தலைவரை சந்தித்து பல நியாயங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களின் குற்றச்சாட்டுகளையும், ஒன்றிய செயலாளர்களின் குற்றச்சாட்டையம் சுட்டிக்காட்டினேன். அதற்கு கிடைத்த பரிசு என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது.

நியாயத்திற்காகவும், தொண்டர்களுக்காகவும் போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்திருக்கிறது. ஆனால் சஸ்பெண்ட் செய்தபோது பொதுச்செயலாளர் விளக்கம் அளித்தபோது, சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பல காரணங்களை சொன்னார். அதில், இன்று தலைவர் சொன்ன எந்த பழியும் அதில் இல்லை.

நான் குறைகளை ஏன் அங்கு சொன்னேன்? என்று பொதுச்செயலாளர் கேட்டர்ர். அதுநியாயமானகேள்வி.

தொண்டர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவாலயத்திற்கு பேக்ஸ் செய்யப்படுகிறது. தலைவருக்கோ பொதுச்செயலாளருக்கோ போய் சேருவதில்லை. இதை தலைவரிடம் சொனனேன். இதுதான் உண்மை.

இது மதுரையில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்த குற்றச்சாட்டு இருக்கிறது. கட்சி தேர்தல் சரியாக நடக்கவில்லை. நான் இதை முதலிலேயே பத்திரிகைக்கு பேட்டி அளித்ததாக கூறியுள்ளார்கள். இந்த குற்றச்சாட்டை நான் நீக்கப்பட்டபிறகுதான் சொன்னேன்.

26-ம் தேதி கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்தேன். அவரிடமும் என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினேன். தொண்டர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து தலைவரிடம் கூறியதை அவரிடம் தெரிவித்தேன். அவரையும் இதுபற்றி பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டேன். என் மீது எந்த குற்றச்சாட்டு சொன்னாலும் தொண்டர்கள அதை நம்ப மாட்டர்கள். அவர்கள் பக்கம் நான் நிற்பேன்.

நான் எப்போதும் கட்சிக்காக பாடுபடுவேன். தலைவர் நன்றாக இருக்க வேண்டும். அவர் நீண்டநாள் வாழ வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad