புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக சோம்தேவ் - தைபேயின் டி சென் மோதிய 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டம் 6-7, 7-6, 1-6, 6-2, 7-7
என்ற செட் கணக்கில் இருந்தபோது நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டத்தின் தொடர்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. எட்டு நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 5-வது செட்டை சோம்தேவ் 9-7 எனக் கைப்பற்றினார். இதனால், இந்திய அணி 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி வெற்றி பெற்றிருந்தார்.
சோவ்தேவ், மூன்றாவது முறையாக சென்னைத் தோற்கடித்துள்ளார். இதற்கு முன் 2009 டேவிஸ் கோப்பை, ஆசியப் போட்டியில் சோம்தேவ் அவரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
போபண்ணா- மைனேனி: இரட்டையர் பிரிவில் போபண்ணா - மைனேனி ஜோடி தைபேயின் ஸீன் யின் பெங், சிங் ஹுவா யங் ஜோடியை சந்தித்தது. முதலில் ஸின் ஹான் லீயும், பெங்கும் தான் முதலில் ஆடுவதாக இருந்தது. ஆனால், இந்திய அணி வலுவாக இருப்பதை அறிந்து யங் களமிறக்கப்பட்டார்.
இருப்பினும், அனுபவ வீரரான போபண்ணாவின் சர்வ் மற்றும் தாக்குதல் ஆட்டத்துக்கு தைபே வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. போபண்ணா 18 ஏஸ் சர்வ்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
16 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை போபண்ணா ஜோடி கைப்பற்றியது. டை பிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டில் தைபே ஜோடி வெற்றி பெற்றது. 2 மணி நேரம் 21 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய ஜோடி 6-0, 6-7 (3), 6-3, 7-6 (2) என வெற்றி பெற்றது.
இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ரிவர்ஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்திய அணிக்கு தலைமை ஏற்றுள்ள சோம்தேவ் கூறுகையில், "இந்த வெற்றிக்கு பின் விடுபட்டிருப்பதாக உணர்கிறேன். இது மிகவும் கடினமான ஆட்டம். யூகி பாம்ப்ரி உள்ளிட்ட சக வீரர்கள் மற்றும் கேப்டன் ஆனந்த் அமிர்தராஜின் வார்த்தைகள் ஊக்கப்படுத்தின. ஆட்டத் தொடக்கத்தில் நன்றாக ஆடினேன். கவனமின்மையால் சில சர்வ்களை இழந்தேன். என்னுடைய இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியும்காரணமாகும்' என்றார்.

ad

ad