புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

திமுக 10-வது மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் சமுத்திரத்தின்சில துளிகள்
* திருச்சியில் திமுக 10வது மாநில மாநாடு நடைபெறும் இடம் முட்புதர்கள் அடங்கிய காடாய் கிடந்தது.  50 நாளில் அந்த இடம் டெல்லி செங்கோட்டையாகவும்,
பாராளுமன்றமாகவும், அரண்மனையாகவும் மாறிவிட்டன.   கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் வந்து பந்தலை பார்த்து சென்றனர்.


* திருச்சி திமுக மாநாட்டு திடலில் இன்று காலை தலைவர்களை வரவேற்கும் வகையில் மேளதாளங்களுடன்  கலைநிகழ்ச்சிகள் நடந்தன.   செங்கோட்டை வடிவிலான முகப்புக்கு அடுத்த மைதானத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம், தாரை தப்பட்டை, பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், உருமிமேளம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.


* மாநாட்டில் கொடியேற்ற வந்த திமுக தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் க.அன்பழகனை வரவேற்க திமுக தொணரணி, தொமுச போக்குவரத்து தொழிலாளர்கள், மகளிர் தொண்டரணியினர்கொடிபிடித்து சீருடையுடன் அணிவகுத்து நின்றனர்.  பேண்ட் இசைக்கு ஏற்ப அவர்கள் அணிவகுத்த காட்சி ராணுவ அணிவகுப்பு போல இருந்தது. 
 * இளம்பெண்கள் கறுப்பு பேண்ட், வெள்ளை டாப்ஸ் கொண்ட சுடிதாரும், தொண்டர் அணியினர் கறுப்பு பேண்ட், சிவப்பு சட்டை தொப்பியுடனும் அணிவகுத்தனர்.  இளைஞரணியினர் வெள்ளை சீருடையுடன் வந்திருந்து கொடி மேடை முன் அணிவகுத்து நின்றனர்.
* திருச்சிக்கு திமுக மாநில மாநாட்டையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும்  ரயில்களிலும் திமுகவினர் வந்தனர்.  இன்று காலை திருச்சி ரயில் நிலையம் வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது.  ரயில் நிலையம் முழுவதும் திமுகவினர் அதிகளவில் காணப்பட்டனர்.  இதனால் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு பல மணி நேரம் ஆனது.
* மாநாட்டிற்கு திமுக தலைவர் கலைஞர், ஓட்டலில் இருந்து காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டார்.  ஓட்டலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் மாநாட்டு திடல் உள்ளது.  கலைஞரின் கார் கருமண்டபம் வரை வேகமாக வந்தது.  அங்கிருந்து மாநாட்டு திடல் வரைஅனைத்து வாகனங்களும் தாறுமாறாக நின்று கொண்டிருந்தன.  அதனை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகளும்  தாறுமாறாக நிறுத்தியிருந்தனர்.   இதனால் கலைஞரின் காரும் நெரிசலில் சிக்கிக்கொண்டது.  தகவல் கிடைத்து திமுக தொண்டரணியினர் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 
*  திமுக 10வது மாநில மாநாட்டில் திமுக தலைவர் கலைஞர் கொடியேற்றி வைத்தார். பொதுச் செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் திருச்சி நகரமே குலுங்கியது.
* திமுக 10வது மாநில மாநாடு திருச்சி பிராட்டியூரில் 250 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணாநகர், பெரியார் திடலில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டுக்கு இதுவரை அரசியல் வரலாற்றில் கண்டிராத வகையில் பிரமாண்டமாக கலைநுட்பத்துடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
* மாநாட்டில் பங்கேற்க கட்சியின் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் நேற்று முதல் திருச்சியில் குவியத் தொடங்கினர். இன்று அதிகாலை முதல் திருச்சியில் எங்கு பார்த்தாலும் திமுக கொடிகளுடன் வேன், கார், பஸ் வாகனங்களும், அலை அலையாக மக்கள் கூட்டம் காணப்பட்டன. 


* மு.க.ஸ்டாலின் சரியாக 9.30 மணிக்கு மாநாட்டுக்கு வந்தார். அப்போது அங்கு கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, செண்டைமேளம், உருமிமேளம் இசை நிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சீருடை அணிந்த தொண்டர்களும் அணிவகுத்து நின்றனர். அவர்களை உற்சாகப்படுத்திய ஸ்டாலின் பின்னர் மேடைக்கு சென்றார்.
* சரியாக 10.50 மணிக்கு கலைஞர், அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டு திடலுக்கு வந்தனர். அப்போது தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். விண்ணதிரும் வாணவேடிக்கைகள் நடந்தது. வாண வெடிகள் வெடித்து சிதறும்போது கறுப்பு சிவப்பு வண்ணத்தில் சிதறி விழுந்த காட்சி தொண்டர்களை கவர்ந்தது.
* மாநாட்டு முன் முகப் பில் அமைக்கப்பட்டு இருந்த ராமஜெயம் நினைவு கொடிமேடை அருகில் கலைஞரின் கார் வந்து நின்றது. அப்போது ஸ்டாலின் கொடி கயிற்றை பிடித்து காரில் இருந்த கலைஞர் கையில் கொடுத்தார். காரில் இருந்தபடியே கலைஞர் திமுக கொடியை ஏற்றினார். திமுக தலைவர் கலைஞரின் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கப்பட்டு இருந்தது. கலைஞர் கொடி ஏற்றியதும் மாநாடு துவங்கியது.
அப்போது கொடிமேடை அருகே உள்ள திறந்த வெளி அரங்கில் கோவை உமாபதி தலைமையிலான திமுக தொண்டரணியினரும், தஞ்சை காரல் மார்க்ஸ் தலைமையிலான மகளிரணி தொண்டரணியினருமாக சீருடையில் 1000 பேர் கொடியுடன் அணிவகுத்து நின்று  சல்யூட் அடித்தனர்.
* பின்னர், மாநாட்டை அன்பழகன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள  பந்தலில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாநாட்டை திறந்து வைப்பதற்கு முன்னரே தொண்டர்கள் மாநாட்டு பந்தலுக்குள் சென்று இடம் பிடித்தனர்.
* கலைஞர் கொடியேற்றிவிட்டு பந்தலுக்குள் வரும்போதே பந்தலின் பெரும்பகுதி தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கலைஞர் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்ட  தலைவர்கள் மேடையில் அமர, மாநாட்டின் முன் வரிசையில் தலைமைக்கழக நிர்வாகிகள், பின்னர் எம்.பி, எம்.எல்.ஏக்கள், அனைத்து அணி நிர்வாகிகள் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து தொண்டர்கள் அமர்ந்தனர். இளைஞரணியினர் வெள்ளை சீருடையுடன் வந்திருந்தனர்.
* முதல் நிகழ்ச்சியாக இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வரவேற்புக்குழு தலைவர்  கே.என்.நேரு வரவேற்று பேசினார். வரவேற்பு முடிந்ததும் தலைவர்களின் படத்திறப்பு விழா நடந்தது. பெரியார் படத்தை திருச்சி செல்வேந்திரனும், அண்ணா படத்தை  திருச்சி சிவா எம்.பியும், சர்.பிட்டி தியாகராயர் படத்தை சபாபதி மோகனும், டி.எம்.நாயர் படத்தை கோவை மு.ராமநாதனும், நடேசனார் படத்தை ஆலந்தூர் பாரதியும்,  பாரதிதாசன் படத்தை முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தனும், மூவலூர் மூதாட்டியார் படத்தை முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும்,  சத்தியவாணிமுத்து படத்தை நூர்ஜகான் பேகமும், மொழிப்போர் தியாகிகள் படத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடியும் திறந்து வைத்து அவர்களது சாதனைகள் குறித்து நினைவு கூர்ந்தனர். அத்துடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
* மாலை 3 மணிக்கு சினிமா புகழ் தஞ்சை சின்னபொண்ணு, வேல் முருகன் குழுவினரின்  இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.  4 மணிக்கு 36 தலைப்புகளில் 36 திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள், முன்னணி நிர்வாகிகள் சொற்பொழிவாற்றினார்கள்.   இரவு 8 மணிக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார்.  அத்துடன் முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. அதன்பிறகு நாடகம் நடைபெறுகிறது.

ad

ad