புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


திமுகவின் 10 மாநில மாநாடு - 56 மாவட்ட மாநாடு : ஆற்காடு வீராசாமி விளக்க உரை
 
தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. மாநாட்டை அக்கட்சியின் தலைவர் தலைவர் கலைஞர் கொடியேற்றி துவக்கி வைத்தார். 


இதையடுத்து வாசுகி முருகேசன் மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   கலைஞர்,  பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், ஸ்டாலின், ஆற்காடு வீராச்சாமி, கனிமொழி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, உட்பட பல்வேறு திமுக பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஆற்காடு விராசாமி பேசியபோது,   ‘’முதலாவது மாநில மாநாடு சென்னையிலே அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.   இரண்டாவது மாநில மாநாடு நாவலர் தலைமையிலே திருச்சியிலே நடை பெற்றது.   மூன்றாவது மாநில மாநாடு மதுரையிலே அண்ணா தலைமையில் நடைபெற்றது.  அப்போது அண்ணா சொன்னார்,  நாட்டு மக்கள் வாக்களிப்பது பிறகு இருக்கட்டும்.  இந்த தேர்தலிலே போட்டியிலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வதற்கு கூடியிருக்கும் கழக தோழர்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலே தங்களது விருப்பத்தை தெரிவியுங்கள்.   அப்படி கருத்து தெரிவித்தவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலிலே போட்டியிடும் என்று அறிவித்தார்.
 ஐந்தாவது மாநில மாநாட்டிலே நமது கலைஞர் ஒப்பற்ற ஐம்பெரும் முழக்கங்களை தந்தார். 

1. அண்ணா வழியில் அயராது உழைப்போம். 

2. ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம். 

3.  இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். 

4. வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

5. மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி
 என்று முழங்கினார்.  அந்த முழக்கம்தான் தமிழ் நாடெங்கும் இதயகீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 
ஏழாவது மாநில மாநாடு கோவையிலே கண்ணப்பன் வரவேற்பு குழு தலைவராக இருக்க, தலைவர் கலைஞர் தலைமை தாங்கி நடத்தினார்.   திருச்சியிலே 8வது 9வது மற்றும் தற்போது இந்த 10வது மாநில மாநாட்டிற்கும் தலைமை ஏற்றிருக்கிறார் தலைவர் கலைஞர். 
10 மாநாட்டில் மூன்று மாநாட்டிற்கு அண்ணா தலைமைதாங்கியிருக்கிறார்.  ஒரு மாநாட்டிற்கு நாவலர் தலைமை தாங்கியிருக்கிறார்.  ஆறு மாநாட்டிற்கு அண்ணன் கலைஞர்தான் தலைமையேற்றிருக்கிறார் இந்த 10வது மாநில மாநாடு இந்தியாவிலே இருக்கின்ற அனைவரும் பிரமிக்கும் வகையில் நடந்து கொண்டி ருக்கிறது. 
திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 56 மாவட்ட மாநாடு நடைபெற் றிருக்கின்றன’’ என்று தெரிவித்தார்.

ad

ad