புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


திமுக 10வது மாநில மாநாடு : நிகழ்ச்சி நிரல்
தி.மு.க.,வின் 10வது மாநில மாநாடு, திருச்சியில் இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. தி.மு.க., தலைவர் கலைஞர் 90 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடி ஏற்றி, மாநாட்டை துவக்கி வைக்கிறார்.



தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, திருச்சியில், இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக, தனியாருக்குச் சொந்தமான, 250 ஏக்கரில், பிரமாண்ட பந்தல், மேடை, மேடையிலேயே தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் தங்க வசதியாக, ஏழு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
 தவிர, கட்சித் தலைவர் கலைஞர், பொருளாளர் ஸ்டாலின் தங்க,  குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டை வடிவில் முகப்பு நுழைவாயிலும், பார்லிமெண்ட் வடிவில் மேடையும் அமைந்துள்ளது. தொண்டர்கள் வசதிக்காக, 100க்கும் மேற்பட்ட குளியலறை, கழிவறைகளும்; 78 கடைகளும் அமைக்கப் பட்டுள்ளன.
திருச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, 40க்கும் மேற்பட்ட மண்டபங்களில், தொண்டர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு ஏற்பாடு பணிகள், நேற்று முன்தினம் முடிவடைந்தன.
இன்று காலை மாநாடு துவங்குகிறது. 90 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடியை கலைஞர் ஏற்றி, மாநாட்டை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி அணிவகுப்பு நடக்கிறது. 10 ஆயிரம் பேர், இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, பொருளாளர் ஸ்டாலின் உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுகின்றனர். மாலை, 3:00 மணிக்கு, இசை நிகழ்ச்சியும், 4:00 மணிக்கு, பல தலைப்புகளில் சிறப்பு பேச்சாளர்களும் பேசுகின்றனர். 9:00 மணிக்கு, நாடகத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. நாளை காலை, 11:00 மணிக்கு, தீர்மானம் வாசிக்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, கலைஞர் பேசுகிறார்.

ad

ad