புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்: அத்வானி குற்றச்சாட்டு
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.


இது தொடர்பாக அத்வானி தனது வலைப்பூவில் மேலும் கூறியதாவது:
மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் மன்மோகன் சிங். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் தலைமையிலான அரசுதான் பெரும் ஊழல் புரிந்துள்ளது என்ற அவப்பெயரை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவர் பெற்றுள்ளார்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை சிஏஜி வெளிக்கொண்டு வந்தது.
நாடாளுமன்றத்தின் மதிப்பை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சீர்குலைத்துள்ளது. ஆனால், அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, நாடாளுமன்றத்தில் எவ்வித பிரச்னையுமின்றி 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தார்.

ad

ad