புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் உறவுகளும் சாட்சியமளிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு 14-17 வரை சாட்சியங்கள் பதிவு.காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல்
போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 14ஆம் திகதி முதல் நேற்று 17ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது.
யுத்த காலத்தில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றியும் அவர்களின் உறவினர்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இறுதி நாளான நேற்றையதினம் யாழ்ப் பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில், புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட தனது மூன்று மகன்மார் தொடர்பில் 95 வயது மூதாட்டியொருவர் ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச முன்னிலையில் சாட்சியங்களைப் பதிவுசெய்தார்.
1990ஆம் ஆண்டு தனது மூன்று மகன்மார் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், ஒரு மகன் வேலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டதுடன், ஏனைய இரண்டு மகன் மாரும் வீட்டுக்கு வந்த புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதாக குறித்த மூதாட்டி வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்டார். இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையைவிட்டு வெளியேறி சிறிது காலத்தில் தனது மகன்மார் கடத்தப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என புலிகளால் கூறப்பட்டபோதும் அவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை இல்லையென்றும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
கடந்த 14ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் 49 சாட்சியங்களும், 15ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 44 சாட்சியங்களும், 16ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் 54 சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டன. இறுதி நாளான நேற்றும் பலர் காணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பாக பலர் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கிளிநொச்சியில் சாட்சியங்களைப் பதிவு செய்தது. இந்த ஆணைக்குழு 440ற்கும் அதிகமான சாட்சியங்கள் பதிவு செய்திருப்பதுடன், இவற்றில் 162 முறைப் பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியிலிருந்து ஆணைக்குழுவுக்கு 13 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad