புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி செய்யும் மிஷின் ஒப்பந்தம் ரத்து

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசியபோது, ’’அம்மா உணவகங்களில் விரைவில் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டியதின்
அவசியம், கருதி, 14 நவீன சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங்களில் 9 நவீன சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங் களுக்கான பட்டி தொகை ரூ.1 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 450 தீர்வு செய்து, ஒப்பந்தக்காரருக்கு (மகாராஜான் ஹாட் சிப்ஸ் உரிமையாளர்) வழங்கப்பட்டது.


ஒப்பந்தக்காரர் ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டபடி, சென்னை மாநகராட்சிக்கு எந்திரங்களை வழங்காததால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழங்கப்பட்ட பட்டித்தொகை முழுவதையும் 90 நாட்களுக்குள் திரும்ப செலுத்துவதாக அவர் உறுதி அளித்து உள்ளார்.
இந்த குறைபாட்டை போக்க, ஒரு அம்மா உணவகத்திற்கு 12 மகளிர் குழு உறுப்பினர்கள் வீதம் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, சப்பாத்திகள் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது’’என்று தெரிவித்தார்.

ad

ad