புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2014

சங்கர் அகாடமியின் சாதனை : 15 பேர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)
நடத்துகிறது. 2013-ம் ஆண்டுக்கான 85 ஐ.எப்.எஸ். பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டது.

இந்த முதல் நிலை தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து ஒன்றரை லட்சம்  பேர் பங்கேற்றனர். இதில்,  ஆயிரம் பேர் இரண்டாவது கட்டத்திற்கு தேர்ச்சி பெற்றார்கள். இந்த ஆயிரம் பேரில் 85 பேர் வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற 85 பேரில் 17 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.  இந்த 17 பேரில் 15 பேர் சென்னையைச் சேர்ந்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
’’28 மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 20 சதவிகித வெற்றி என்பது பெருமைக்குரிய விசயம்’’ என்கிறார் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிர்வாகி சங்கர்.   அவர் மேலும்,  ‘’எனது அகாடமியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற 15 பேரில், 13 பேர் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள்’’ என்று தெரிவித்தார்.
சங்கர் ஐ.ஏ.எஸ்.  அகாடமி, சென்னையில் கடந்த 10 வருடங்களாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad