புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014


காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட

1,687 விருப்ப மனுக்கள் குவிந்தன

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்றுமுன்தினம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 2ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு  காங்கிரஸ் தலைமை
அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர். இதற்காக  5 கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.தென் சென்னை- காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் போட்டியிட கோரி விருப்ப மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போல், தென்சென்னை- ஜி.கே.வாசன் போட்டியிட கோரி சைதை ரவியும், மத்திய சென்னை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட கோரி மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், அகரம் கோபியும், மத்திய சென்னையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட கோரி தென் சென்னை மாவட்ட பொது செயலாளர் எஸ்.எம்.குமார், மத்திய சென்னையில் போட்டியிட வில்லிவாக்கம் சுரேஷ், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவும், வடசென்னையில் தான் போட்டியிடவும் வி.எஸ்.ஜெ.தினகரன் மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்(தனி) தொகுதியில் டாக்டர் செல்லக்குமார் போட்டியிட கோரி மாநகராட்சி கவுன்சிலர் பி.வி.தமிழ்செல்வனும், வடசென்னை தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட கோரி பிஜூ சாக்கோவும், கன்னியாகுமரியில் போட்டியிட கோரி ரமேஷ் குமாரும் மனு தாக்கல் செய்தனர்.மத்திய சென்னையில் போட்டியிட ஆயிரம் விளக்கு எம்.பி.ரஞ்சன் குமார் விருப்ப மனுதாக்கல் செய்தார். இந்த தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட கோரியும் அவர் விருப்ப மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி, நெல்லை தொகுதியில் போட்டியிட முன்னாள் மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், மத்திய சென்னை- அருள்பெத்தையாவும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் போட்டியிட கோரி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானும், சேலத்தில் தங்கபாலு போட்டியிட கோரி மகிளா காங்கிரஸ் சார்பில் சாரதா தேவியும் மனு தாக்கல் செய்தனர்.இதே போல் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தென்சென்னை, மதுரை, திண்டுக்கல் போட்டியிட கோரி உயர்நீதிமன்றம் காங்கிரஸ் வக்கீல் சங்கம் சார்பில் சத்திய மூர்த்தியும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். 2 நாட்களில் மொத்தம் 1,687 விருப்ப மனுக்கள் குவிந்தன. சென்னையில் மாநில தேர்தல் குழு நாளை கூடி விண்ணப்பங்களை பரிசீலிக்க உள்ளது.

ad

ad