புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்! ஜனாதிபதி ஆட்சி?
தெலங்கானா மசோதா மக்களவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சீமந்திரா பகுதியில் கடும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.


அங்கு தொடர்போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புதன்கிழமை சீமந்திரா பகுதியைச் சேர்ந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை  ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதேநேரத்தில் அடுத்த அரசு அமையும் வரை காபந்து முதல்வராக நீடிக்கும்படி கிரண்குமார் ரெட்டியை ஆளுநர் கேட்கவில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளதால் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு அதிக அளவு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad