புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் மாரிமுத்து(25). இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகளான லட்சுமிஈஸ்வரி(16). இப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியி்ல 11-வது படித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடத்த உறவினர்கள் நிச்சயம் செய்திருந்தனர். இத்திருமணம் விருப்பமில்லாமல் நடைபெறுவதால், இது தொடர்பாக உடனடியாக லட்சுமி ஈஸ்வரி ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் உடனே அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர் ஜெயசீலி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் பாரதமாதா மற்றும் சைல்டு லைன் அமைப்பின் அலுவலர்கள் ஆகியோர் மணமகள், மணமகன் ஆகியோர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் குறிப்பிட்ட வயது வருவதற்குள் திருமணம் செய்வது தவறு என்று குறிப்பிட்டு ஆலோசனை வழங்கினர். அதோடு, சிறுமியை மீட்டு அரசு பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்காபுரத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகன் சுதாகர்(25). அதே பகுதியைச் சேர்ந்த படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகள் தனலட்சுமி(14) என்பவருக்கும் வருகிற மார்ச் மாதம் 9-ம்தேதி திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்திருந்தனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் ரகசிய தகவல் அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நடைபெற இருக்கிற திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். அதோடு, சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

ad

ad