புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை கோரி தமிழகமெங்கும் 20ம் திகதி ஆர்ப்பாட்டம்! நெடுமாறன்
ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்ச மீது விசாரணை நடத்த தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு ஆணையத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
தஞ்சை விளார் சாலை அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. நசீமுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து பின்பு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
இலங்கை மற்றும் தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் முழு உரிமை பெறுவதற்கு உலக நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்பை ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்சே மீது விசாரணை நடத்த தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு ஆணையத்தை அமைக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ad

ad