புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

இந்த விடுதலையை ஈழ விடுதலையின்முதல் படியாகவே பார்க்கிறேன் : சீமான்
ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோர் தூக்குத்தண்டனையில் இருந்து விடுதலை செய்யப் படுகிறார்கள்.



இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். 23 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் போராட்டத்துக்கும், தங்கை செங்கொடியின் உயிர் தியாகத்துக்கும் கிடைத்த வெற்றி. தலைமை நீதிபதி சதாசிவம், மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோரின் பங்கும் 7 பேரின் விடுதலையில் மகத்தானது.
போராட்டமும், புரட்சியும் எப்போதும் தோற்றுப் போகாது என்பதற்கு இந்த விடுதலையே உதாரணமாகும். அற்புதம் அம்மாளின் மனநிலையில் இருந்து தாய் போல தமிழக முதல்–அமைச்சர் சிந்தித்து பார்த்திருக்கிறார்.

அதனால் தான் கோரிக்கை வைக்கும் முன்னரே விடுதலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை தமிழ் தேசியமே வரவேற்கிறது. இந்த விடுதலையை ஈழ விடுதலையின் முதல் படியாகவே பார்க்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad