புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 2500 கோடி ரூபா
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் என 2500 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதியாண்டுகளுக்கான வருடாந்த நட்டம் 25000 கோடி ரூபாவாக இருக்கும் என சிவில் விமான சேவை அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கான மாதாந்த செலவு ஒரு லட்சத்து அறுபத்தாறாயிரத்து எழுநூற்று இருபத்து இரண்டு ரூபாவாகும்.
மாதாந்தம் எந்தவொரு லாபமும் ஈட்டப்படுவதில்லை.
விமான சேவை நிறுவனத்தில் 6523 பணியாளர்கள் கடமையாற்றிய போதும், ஆளணி பற்றாக்குறை நிலவி வருகின்றது.
குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் விமான சேவை நிறுவனம் பாரியளவில் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்ப்ப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ad

ad