புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

    மதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்

ஆக்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் இரவு கைகலப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு
எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஆக்லாந்தில் உள்ள மதுபான பாரில் ரைடர் மற்றும் பிரேஸ்வெல் இருவரும் மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் பிரேஸ்வெலின் பாதத்திலும், ரைடரின் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சண்டைக்கான காயம் என்னவென்று இதுவரையிலும் தெரியவில்லை.
இருவரும் முதல் டெஸ்டில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் இந்த தகவல் வெளியானதும் இருவருக்கு எதிராக விசாரணை நடத்த நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. தற்போது இருவரும் பாரில் அநாகரீகமாக நடந்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வெலிங்டனில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறுகையில், ""செவ்வாய்க்கிழமைக்குள் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்படும். அதில் ரைடர், பிரேஸ்வெல் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனால் தற்போது அரைகுறையாக எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. இப்போதைக்கு அடுத்து போட்டிக்கு தயாராவதே எங்கள் குறிக்கோள்'' என்றார்.
ரைடர், பிரேஸ்வெல் இருவரும் அணியின் விதிமுறைகளை மீறுவது இது முதன்முறை அல்ல. விதிகளை மீறியதற்காக 2012-ல் இருவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். ஜெஸ்ஸி ரைடர் இதற்கு முன் ஹோட்டல் மதுபான விடுதியில் நடந்த தகராறில் ஈடுபட்டு காயம் அடைந்திருந்தார். அதோடு ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. இதில் இருந்து மீண்டு சமீபத்தில்தான் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினார்.

ad

ad