புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

சந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதி சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆந்தி ராவை வீழ்த்தி முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சந்தோஷ் கோப்பைக் கான 68ஆ-வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் வருகிற 24-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற் கும் 10 அணிகள், 5 மண் டல அளவிலான தகுதி சுற்று போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.
இதில் சென்னையில் நடை பெற்ற தென்மண்டல தகுதி சுற்றில் தமிழ்நாடு, கர் நாடகா, கேரளா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக் கோபர் அணிகள் மோதின. இதில் முதல் இரண்டு இடங் களை பிடிக்கும் அணி கள் சந்தோஷ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
சென்னை நேரு ஸ்டே டியத்தில் நடந்த தென் மண்டல தகுதி சுற்று போட்டியில் நேற்று மாலை நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு _ -ஆந்திரா அணிகள் மோதின.
முடிவில் தமிழக அணி 4_-0 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை எளிதில் தோற்கடித்தது. முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா_-கர்நாடகா அணிகள் மோதின. இதில் டிரா செய்தாலே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கர்நாடக அணி ஆடியது.
அணி 3-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்தது. தோல்வியை சந்தித்ததால் கர்நாடகம் தகுதியை இழந்தது.
முதல் இரண்டு இடங் களை பிடித்த தமிழகம், கேரளா அணிகள் சந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டி இறுதி சுற்றுக்கு தென் மண்டலத்தில் இருந்து தகுதி பெற்றன.

ad

ad