புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014




ஈழத்தில் நடந்த கொடூரம்; ஒரே இரவில் 40 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்-
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அ ங்கமுத்து 

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையின் கீழ் பெரியார் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை சார்பில், தமிழ் இலக்கியங்களில் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த தேசிய அள விலான மூன்று நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்
கே.அ ங்கமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சமூகவியல் துறைத் தலைவர் சி.வெங்கடாசலம் வரவேற்றார்.  கருத்தரங்கைத் தொடக்கி வைத்து யாழ்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கம் பேசியதாவது:


’’அன்பு செலுத்துவதும், அன்பு செலுத்தப்படுவதுமே குடும்பக் கட்டுமானத்தை வடிவமைக்கிறது. குடும்ப வாழ்வில் பெற்றோர் திருப்தியாக இருந்தால் மட்டுமே பிள்ளைகள் வளர்ப்பு நன்றாக அமையும்.  சமீபகாலமாக தமிழகத்தில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்கள் அதிகரித்து வரும் நிலை யில், இலங்கையில் பிள்ளைகளின்  தலைமைக் குடும்பங்கள் உருவாகி வருகின்றன.


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்து முடிந்த ஈழப் போரின் போது, ஒரே இரவில் 40 ஆயிரம் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்து விட்டனர்.


இப்போது, பெற்றோர்களை இழந்த அந்தக் குடும்பங்களில் உள்ள வயதில் மூத்தக் குழந்தைகள் தலைமை யேற்று, தங்களுடைய பால்யத்தைத் தொலைத்துவிட்டு கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் சூழ்நிலையை உருவாகியுள்ளது.


ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய மாணவர்களை, குழந்தைகளைப் போலக் கருதி அவர்களை முன்னேற்ற செய்ய வேண்டும். ஆசிரியர்கள் இந்த பிள்ளை நேயத்தைத் தொலைத்து விட்டால் ஆசிரியர்கள் மரக்கட்டைகளாகி விடுகின்றனர்.


கல்வியின் நோக்கம், கற்பவர்களை முன்னேற்றுவதாகவே இருக்க வேண்டும். அதுதான் முழுமையான கல்வி. அதற்கு முழுதான கல்வி தேவைப்படுகிறது’’ என்றார் அவர்.

காந்திகிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.எம்.ராமசாமி, பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், உதவிப் பேராசிரியர் சி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து இந்நிகழ்ச்சியில்  கொண்டனர்.

ad

ad