புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014

‘கொலைக்களம்’ ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை!

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மோதல் தவிர்ப்பு வலயம்; இலங்கையின் கொலைக்களம் (No Fire Zone: The Killing Fields of Sri Lanka) ஆவணப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதியை வழங்குமாறு அந்த படத்தின் இயக்குனர் கெலம் மக்ரே இந்திய தணிக்கைப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இணையத்தினூடும் கொலைக்களம் ஆவணப்படத்தை பார்வையிட முடியாது. இந்தத் தடையை அடுத்து, இந்தியத் தொலைக்காட்சிகளிலும் குறித்த ஆவணப்படங்களை காட்சிப்படுத்த முடியாது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ள நிலையில், அந்த தீர்மானத்துக்கு கூடுதல் பலத்தை கொலைக்களம் ஆவணப்படம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கொலைக்களம் ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது கவனக்கத்தக்கது.

ad

ad