புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை 
நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது காயத்துக்கு ஆளாகிறார். 



ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் சண்டை காட்சியில் டைவ் செய்யும்போது அவரது கால் வேகமாக சென்ற காரின் முன்பக்க டயரில் சிக்கியதில் காயம் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். ஆனால் தற்காலிகமாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் ஷூட்டிங் முடிந்தபிறகு ஆபரேஷன் செய்துகொள்வதாக கூறினார்.
படம் முடிந்தும் அவரால் அறுவை கிச்சைக்கான டைம் ஒதுக்க முடியாமல் பிஸியாகவே இருந்தார். இந்தநிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தார். ஆபரேஷனுக்கு டைம் ஒதுக்க எண்ணிய நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.

ஏற்கனவே சூர்யாவை வைத்து துருவநட்சத்திரம் என்ற படத்தை கவுதம் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஸ்கிரிப்ட் விஷயத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொண்டார். தர்மசங்கடமான நிலையில் தன்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகிய கவுதம் மேனனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜீத்.
இதனால் மறுபடியும் அஜீத்தின் ஆபரேஷன் திட்டம் தள்ளிப்போனது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் அவர் பரிசோதனைக்காக டாக்டரை சந்தித்தார். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.


ஆனாலும் கவுதம் மேனனுக்கு கொடுத்த கால்ஷீட்டை அவர் தள்ளிப்போட மனமில்லாமல் மீண்டும் ஆபரேஷன் திட்டத்தை தள்ளிப்போட்டிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் ஆபரேஷன் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

ad

ad