புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

சுவிசில் வேலையற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 
கடந்த டிசம்பரில் 6-9 வீதமாக இருந்த வேலை அற்ற வெளிநாட்டவரின் வீதம் இந்த ஜனவரியில் 7.1 வீதமாக உயர்ந்துள்ளது

சுவிட்சர்லாந்தில் மீண்டும் வேலையில்லா திண்டாட்டம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
சுவிசின் பொருளாதார செயலக அறிக்கையின்படி, மொத்தம் 1,53,260 பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், மொத்தம் 3,823 பேர் கடந்த ஜனவரி மாதம் முதல் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சுவிசில் 6.9 சதவீதமாக இருந்த வேலையில்லாதவரின் எண்ணிக்கை 7.1 சதவீதமாக மாறியதுடன், கடந்தாண்டை காட்டிலும் 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எனினும் யூபிஸ் வங்கியின் பொருளாதார அறிவிப்பின்படி, இந்தாண்டில் 2.1 சதவீதம் வளர்ச்சியும்,வரும் 2015ம் ஆண்டில் 2.4 சதவீதம் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என தெரிவிக்கின்றன.

ad

ad