புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

மனிதக் கழிவிலிருந்து பசளை தயாரிப்பு; வடக்கில் முதன் முதலாக மன்னாரில்; பாப்பாமோட்டையில் 67 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம 
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில்   மன்னார் மாவட்டத்திலேயே  முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன்  ரூபா  செலவில்  இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.


மனிதக் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி குறித்த செயற்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. உலர்வலய நகர் நீர் மற்றும் சுகாதார செயற்திட்டத்துக்கு அமைவாக நடைபெற்று வரும் குறித்த வேலைகளுக்கான நிதியை இலங்கை அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இணைந்து வழங்கி வருகின்றன.

இதற்கென 67 மில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.  கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அபிவிருத்திப் பணிகள் எதிர் வரும் ஜூலை மாதம் வரையிலான  ஒருவருடகாலம் நடைபெறவுள்ளது.

மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் போடுவதில் சுகாதாரம் உட்பட பல சிக்கல்கள் காணப்பட்டன.
இந்நிலையை  கருத்திற்  கொண்டே  குறித்த  மனிதக் கழிவுகளை  வடிகட்டி பதப்படுத்தி  பயன்மிக்க  பசளையாக  தயாரிக்க  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுற்றுச் சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் பாதிப்பில்லாமல் குறித்த மனிதக்கழிவுகளை  அகற்றி  அதன்  மூலம்  கிடைக்கப்பெறும்  பசளையை  மன்னார் மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும்  ஏற்றுமதி  செய்து  கிடைக்கப்பெறும் நிதியின் மூலம் மேலும் பல அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடுவதற்கு மன்னார் நகரசபை திட்டமிட்டுள்ளது.

இதற்கென மன்னார் திருக் கேதீஸ்வரத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஏ-32 பிரதான வீதிக்கு அண்மையில்  அமைந்துள்ள பாப்பாமோட்டை என்ற இடத்தில் கட்டுமானப்பணிகள்  இடம்பெற்று  வருகின்றன.

குறித்த பகுதியில்1.75 யஹக் ரெயர் நிலப்பரப்பில் இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகிறது.  இதன்படி குறித்த பகுதியில் பசளை தயாரிப்புக்கென மொத்தமாக  5  விசாலமான  தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

இதன்படி 53 மீற்றர் நீளமும் 38 மீற்றர் அகலமும் கொண்ட தொட்டி ஒன்றும், 24மீற்றர் நீளமும் 12 மீற்றர் அகலமும் கொண்ட தொட்டி ஒன்றும் , 18 மீற்றர் நீளமும்  10 மீற்றர்  அகலமும் கொண்ட  தொட்டி ஒன்றும் அதே போன்று 8 மீற்றர் நீளமும் 7 மீற்றர்  அகலமும் கொண்ட  இரண்டு  தொட்டிகளும்  அமைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த கட்டுமானப்பணிகள் முடிவடைந்தபின் பசளை உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் மன்னார் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வேலைத்திட்டத்தை முதல் இரண்டு வருடங்களுக்கு தேசிய நீர்வடிகாலமைப்பு அதிகார சபை பராமரிப்பதோடு அதன்பின் மன்னார் நகர சபைக்கு வழங்கப்பட்டு பராமரிக்கவும்  முடிவாகியுள்ளது.
                                        

ad

ad