புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

7 பேர் விடுதலை: ஜெயலலிதா அறிவிப்புக்கு ராமதாஸ் பாராட்டு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
இது குறிது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
   ‘’தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் டபயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இவர்களின் விடுதலைக்கான சட்டபூர்வ நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பதால் அடுத்த சில நாட்களில் இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் விடுதலை காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று என்ற போதிலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.


இதே போல் பல்வேறு பொய் வழக்குகளில் 1989 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 65 வயதைக் கடந்த அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad