புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு
 முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.



இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
7 பேரும் விடுதலை செய்யப்படுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் துணிச்சலான முடிவை எடுத்து இருப்பதாக பாராட்டியுள்ளன.
ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. குறிப்பாக ராகுல்காந்தி வெளிப்படையாகவே தனது கவலையை வெளியிட்டார். தமிழக அரசின் நடவடிக்கையால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நேற்று மாலை டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ராஜீவ் கொலை கைதிகள் மீது அடுத்தடுத்து காட்டப்பட்டுள்ள கருணை முடிவுகளை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக இரண்டு மறு ஆய்வு மனுக்களை தயாரித்தனர். இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டகிறது. முதல் மறு ஆய்வு மனுவில், ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய் ததை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்படுகிறது. மற்றொரு மனுவில்  7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்வதற்கு தடை விதிக்க கோரிக்கை விடப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவையே மாற்றாது என்று கூறப்படுகிறது.
மேலும் மாநில அரசுக்கு என வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குள் நுழைந்து தமிழக அரசின் முடிவை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே மத்திய அரசுக்கு 3 நாள் கெடு விதித்து தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பது சட்ட விரோதமானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. மேலும் மத்திய –மாநில அரசுகளுக்கு இடையே இந்த விவகாரம் சட்டப் பிரிவுகளில் நுணுக்கமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  எனவே இன்னும் 3 நாட்களுக்குப் பிறகு எத்தகைய நடவடிக்கைகள், திருப்பங்கள் ஏற்படும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

ad

ad