புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


மிழ்த் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் (74) மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா: இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடைய அனைத்து படங்களிலும் தனித்துவமான ஒளிப்பதிவால் தனித்து தெரிந்தவர் அவர்.

நடைமுறை வாழ்வின் நெருக்கத்தில் சென்று தனது படைப்பை மக்களுக்கு அளித்த அவருக்கு இந்திய சினிமாவில் எப்போதும் தனி இடம் உண்டு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: பாலுமகேந்திரா வன்முறையையும் மட்டமான ரசனைகளையும் நம்பாமல் உன்னதமான, புரட்சிகரமான கருத்துகளை போதிக்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்கியவர்.
தாய்மொழி வழிக் கல்வியையும், குடும்ப உறவுமுறைகளையும் போற்றும் வகையில் அண்மையில் அவர் உருவாக்கிய "தலைமுறைகள்' படம் என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்றாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர், வைகோ: இயற்கை அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டி பிரமிக்க வைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாலுமகேந்திரா. "மூன்றாம் பிறை', "மூடுபனி' திரைப்படங்களைத் தந்து புகழ்பெற்றார்.
சினிமாவில் மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் பாலுமகேந்திரா. அவரது மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பாகும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: இயக்குநர் பாலுமகேந்திரா இடதுசாரி இலக்கிய அமைப்புகளோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். தன்னுடைய படைப்புகள் மூலம் மனிதநேயத்தையும், அன்பையும் வெளிப்படுத்தியவர். ஆழமான சமூக அக்கறை கொண்டவர். அவருடைய மறைவு தமிழ்த் திரையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்ற இரண்டு நிலைகளில் புதிய பாதையை உருவாக்கி, தனித்த முத்திரையை பதிவு செய்துள்ள புகழ்மிக்க கலைஞர் பாலுமகேந்திரா. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ad

ad