புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

தமிழர் மனங்கள் போற்றும் தீர்மானங்களை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்: சிறீதரன் எம்பி
ரஜிவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக சட்ட சபை தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஈழத்தில் இருந்து மக்கள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க கூடிய துன்பியல் நிகழ்வான இந்திய பேரரசின் மாண்புமிகு பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் கொலை சமபவத்தின் பின்னாக அக்கொலை தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டதும், இந்திய ஈழத்தமிழ் உறவுப்பிணைப்பில் கண்ணூறு பட்டதுபோல முரணும் புரிந்துணர்வற்ற அணுகுமுறைகளுமாக நேற்றைய கணங்கள்வரை நெஞ்சுக்குள் நெருடிக்கொண்டிருந்த ஒரு முள் போன்ற விடயம் ஆச்சரியப்படும்படி போற்றும்படி மலராக மாறியிருக்கின்றது.
கடந்த இருபத்து மூன்று வருடங்களாக தூக்கு தண்டனை கைதிகளாகவும் ஆயள் தண்டனை கைதிகளாகவும் தங்கள் இளமையை வாழ்வின் இன்பங்களை சிறைக்கம்பிகளின் பின்னால் தொலைத்துக் கொண்டிருந்த எமது உயிர் உறவுகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், திருமதி நளினி, றொபட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் வாழ்வின் வசந்தங்களை தரிசிக்க இப்பிறவியின் பெரும் ஆனந்தமான விடுதலை என்ற வேதவாக்கு எமது தாய்த்தமிழ் இதயங்களின் இருப்பிடமான தமிழ்நாட்டின் சட்டசபையில் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் திருவாயிலிருந்து வந்திருப்பதை கண்டு தமிழ் உலகம் இன்று மிகவும் மகிழ்ந்துபோய் இருக்கின்றது.
உறவுகளின் பிரிவின் வலியை தாய்மையின் வலியை இப்பிறவியின் யதார்த்தத்தை நன்கறிந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும் நியாய பூர்வமாகவும் தமிழ் நாட்டின் அரசாங்கம் தனது காலக்கடமையை செய்திருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் உலகமெலாம் வாழும் தமிழ் மக்கள் சார்பில் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும் அவர்தம் அமைச்சரவைக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இப்போது இந்தியாவில் நடந்திருக்கக்கூடிய இந்த அற்புதமான மாற்றம் மிகச் சாதரணமானதல்ல.இது காலம்காலமாய் பிணைக்கப்பட்டிருந்த உறவு இழை இடையில் துரதிஸ்ட வசமாக அறுந்து. அது ஒரு துன்பகரமான பிரிவு வலியாக இருந்து அது இறுதியில் தன் பழைய உறவு நிலைக்கு திரும்பியிருக்கின்றது.
இதற்கு இத்தனை ஆண்டுகள் சென்றிருக்கின்றது. அதற்கு இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆயினும் எமது உறவுகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, றொபட்பயஸ் ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை ஒரு கனவாகவே தொடர்ந்தது.
ஆனால் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வர் ஆன இத்தடவை அவரும் அவர் தம் சபையும் ஈழத்தமிழ் மக்களுக்காக சர்வதேச ரீதியில் நியாயம் உரிமைகள் கிடைக்க மிகவும் வலுமிக்க தமிழக மனங்களின் துடிப்பறிந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை மீள நினைவு கொள்கின்றோம்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னால் ஏற்பட்டிருக்ககூடிய தமிழர் வீழ்ச்சியை கைகொடுத்து எழுவைக்கும் கரமாகவும் வருடிக்கொடுக்கும் காற்றாகவும் தர்மத்தின் பக்கம் தலைசாய்க்கும் தமிழர் தலைமையாகவும் நிற்கும் தமிழக அரசுக்கு நாம் நன்றி சொல்கின்றோம்.
எப்போதும் தமிழ் நாடு எம் இரத்த உறவு என்பதை தமிழகம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் மாண்புமிகு ரஜிவ்காந்தி அவர்களின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை கைதிகளாக ஆயள் தண்டனை கைதிகளாக இருந்த எம் சொந்தங்களை நியாயங்களை தீர ஆராய்ந்து கருணை காட்டிய நீதிவான்களுக்கும் நியாயங்களை ஓயாது இத்தனை ஆண்டுகளாய் எடுத்துரைத்த சட்டத்தரணிகளுக்கும் இந்த சிறைச்சொந்தங்களின் விடுதலைக்காய் உயிர்கொடுத்த உத்தமி செங்கொடிக்கும் நீதிக்காக குரல் கொடுத்து தமிழக கட்சிகளுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக மக்களுக்கும் நாம் தலைசாய்க்கின்றோம்.
உறவுளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, றொபட்பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலை தொடர்பில் தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் இதன் அடிப்படையில் இந்திய மனநிலையில் ஏற்பட்டிருக்ககூடிய உணர்வுபூர்வமான மாற்றமும் எமது மக்களை மகிழ்ச்சி அடைய செய்கின்றது.
எமது மக்கள் தம் பலம் என நம்பி இருக்கும் தமிழ்நாடும் அதன் ஆட்சிபீடமும் தமிழர்களுக்கு ஒரு நியாயபூர்வமான உரிமைகளுடன் கூடிய வாழ்வு கிடைக்கும்வரை உதவவேண்டும் என மிகவும் பணிவுன்புடன் எமது மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad