புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் கைது
நீதிமன்ற உத்தரவையும் மீறி உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கலைக்கப்பட்ட பின்னர், இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் சிலருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் கடந்த 60 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இரண்டு முறை நீதிமன்றம் தடைவிதித்தும் மாணவர்கள் திங்கட் கிழமை உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இ்நத நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இது குறித்து மிகிந்தலை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததனர். இதனையடுத்து நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட பகுதியில் உண்ணாவிரத்தில் இருக்கும் மாணவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரும் தொகையான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் குழுமியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

ad

ad