புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

புறக்கோட்டையில் சூதாட்ட நிலையங்கள் முற்றுகை

முகாமையாளர் உட்பட 94 பேர் கைது,மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழு அதிரடி
சூதாட்ட நிலையங்களைச் சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஐந்து சூதாட்ட நிலையங்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப் பட்ட இந்த அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சூதாட்ட நிலையங் களின் முகாமையாளர்கள் உட்பட 94 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் பெண்ணொருவரும் அடங்கும்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரசேன நாயக்கவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரது ஆலோசனைக்கு அமைய மாளிகாகந்தை மஜிஸ்திரேட் நீதவானிடமிருந்து தேடுதல் நடத்துவதற்கான அனுமதியை பெற்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த அதிரடி சுற்றிவளைப்பை நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளனர்.
புறக்கோட்டையிலுள்ள ஒல்கொட் மாவத்தை, மல்வத்தை மற்றும் முதலா வது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
சாதாரண நபர்கள் போன்று மாறு வேடத்தில் சென்ற பொலிஸ் குழுவே இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர். முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ள இந்த நிலையங்களுக்கு செல்ல முற்பணமாக 3000 ரூபா கொடுப்பனவை செலுத்தியே பொலிஸார் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதன்போது அந்த சூதாட்ட நிலையங்களை நடத்தி வந்த முகாமையாளர்கள், ஊழியர்கள் உட்பட 94 பேரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு இடங்களிலும் சூதாட்டத்திற்கு கொடுப்பதற்கு வைக்கப் பட்டிருந்த சுமர் 3 இலட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ள துடன் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேசமயம், மாளிகாகந்தை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர். கொழும்பு நகரில் இது போன்று சூட்சுமமாகவும் சட்ட விரோதமான முறையிலும் நடத்தப்பட்டு வரும் சூதாட்ட நிலையங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ad

ad