புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

மரண தண்டனை குறைப்பு: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு
கைதிகள் 15 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை வல்லுநர் கிரிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வுரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.
மன உளைச்சலுக்கு ஆளான கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்பதை உறுதி செய்து, சர்வதேச அளவில் ஏற்கத்தக்க தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
மரண தண்டனை விதிக்கப்படுவதாக இருந்தால், குற்றத்தை முழுவதுமாக உறுதிப்படுத்தும் விதத்தில் விசாரணை நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை சர்வதேச சட்டங்கள் குறிப்பிடுகிறது என்று கிரிஸ்டோஃப் கூறினார்.
ஐ.நா. மனித உரிமை வல்லுநர் ஜுவான் ஈ மென்டெஸýம், இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
கருணை மனு மீது முடிவெடுக்க அரசு தாமதப்படுத்தியதை அடிப்படையாகக் கொண்டு, மரண தண்டனைக் கைதிகள் 15 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது,

ad

ad