புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

கனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை  அழைக்கும் விசா திட்டத்துக்கான எண்ணிக்கை எல்லை இப்போது நிறைந்து விட்டதால் அந்த முறை தற்போதைக்கு மூடப் பட்டுள்ளது 
Chris Alexander
அண்மையில் சில வாரங்களுக்;கு முன்பாக பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ரோரைக் கனடாவிற்குள் குடியேற அழைக்கம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டமானது 2014ம் ஆண்டிற்கான நிர்ணயத் தொகையை எட்டிவிட்டதெனவு
ம் அத்திட்டம் மூடப்பட்டுவிட்டதெனவும் குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் தெரிவித்திருப்பதாகக் கனடியன் பிறஸ் செய்தித் தாபனம் வெளியிட்டிருக்கின்றது.
கனடிய மத்தியரசு குறிப்பிட்ட பிரசித்தி வாய்ந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கி தற்போது 33 நாட்கள் ஆகின்றன எனவும் அதற்குள் அதிகாரிகள் 2014ம் ஆண்டிற்கான இலக்கை அடைந்து விட்டதாகத் வெளியிட்டிருக்கி;னறார்கள். அத்துடன் இந்தத் திட்டமானது விண்ணப்பங்களை ஏற்று இரு வருடங்களுக்கு அவை நிலுவையில் வைத்திருக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
திங்கட்கிழமை தாம் 2014ம் ஆண்டிற்கு நிர்ணயித்த தொகையான 5,000 விண்ணப்பங்கள் கிடைத்துவிட்டன வென்று குடியுரிமை, மற்றும் குடிவரவு அமைச்சாரான கிறிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டிற்கான இலக்கைத் தாம் அடைந்துவிட்டோம் எனவும் இந்த வருடத்திற்கான இத் திட்டம் முடிவடைந்து விட்டது எனவும் அடுத்த வருடம் வரை இந்தத் திட்டம் மூடப்பட்டுவிட்டதெனவும் தெரியவருகிறது. ஆனால் பெற்றோர், பாட்டன், பாட்டி போன்றோரை 10 வருடங்களுக்கான  multiple-entry supervisa என அழைக்கப்படுகின்ற திட்டத்த்pன்கீழ் அவர்களை வரவழைக்க முடியும் எனவும் அத்துடன் அவர்கள் ஒரே தடவையில் இரு வருடங்களுக்கு தங்கள் உறவினர்களுடன் தங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் அமைச்சர் அவர்கள்; குடும்பங்கள் தாங்கள் நேசிப்பவருடன் இணைந்து வாழ விரும்புகின்றார்கள் என்பதைத் தமது அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கின்றது எனவும் தாம் தமது குடிவரவு நடைமுறைகளை முன்னேற்றுவதற்குச் சங்கற்பம் எடுத்திருப்பதாகவும், தற்போது வீசா வழங்குகின்ற அதிகாரிகள் கடந்த 8 வருடகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்து 165, 000 விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்கின்றார்கள் எனவம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் இந்தத் திட்டமானது காலவரையின்றி இரத்து செய்யப்படவேண்டும் என்றும் கருத்துக் கூறப்படுகின்றது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் வேலை செய்யும் ஆற்றல் குறைந்தவர்களாக இருப்பார்கள் எனவும், கனடிய சுகாதாரப் பராபரிப்புத்துறையினருக்குப் பெரும் பாரமாக அமைவார்கள் எனவம் ஒரு சாராரால் கூறப்பட்டிருக்கின்றது. இன்னொரு சாரார் பெற்றோர் குழந்தைப் பராமரிப்பினை செய்கின்றபோது கணவன் மனைவி இருவரும் தொழில்செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவிக்கின்றனர்.
- See more at: http://www.canadamirror.com/canada/21532.html#sthash.bxEifSVN.dpuf

ad

ad