புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014

குற்றத்தை ஏற்றுக்கொள்வதாக கனேடிய தமிழர் அமெரிக்க நீதிபதிக்கு கடிதம் 
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள கனேடிய தமிழர் ஒருவர் தமது குற்றத்துக்காக மன்னிப்பை கோரியுள்ளார்.

இதன்மூலம் அவர் சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக தே நேசன் போஸ்ட் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
தாம் செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறி பிரதீபன் என்ற பீட்டர் நடராஜா, அமெரிக்கா பிராந்திய நீதிபதிக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இந்த தவறுக்காக எனது இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
37 வயதான பீரதீபன் தொழில்நுட்பவியலாளராவார். விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முற்பட்ட குற்றச்சாட்டுக்கே இவர் உள்ளாகியுள்ளார.
இலங்கையின் இருந்த விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்களின் உத்தரவுக்கு அமைய இவர் உட்பட்ட குழு அமெரிக்காவுக்கு சென்று ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான சாம் ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முற்பட்டமைக்காகவே கனேடிய காவல்துறையினரால் 2006 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.
எனினும் பிரதீபன் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கனேடிய உயர்நீதிமன்றம் நிராகரித்தமையை அடுத்து, அவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அங்கு இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து அவருக்கு குறைந்தது 10 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமக்கான மன்னிப்பு கோரிய கடிதத்தில், விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்ய முயன்று தமது சகோதரரையே தாம் கொன்று விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த லயன் எயார் விமானத்தின் பங்காளராக தமது சகோதரர் இருந்தார்.
அவர் தாக்குதல் ஒன்றின்போது கொல்லப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதீபன், தாம் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தமது சகோதரரையை பலிகொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றத்துக்காக தாம் தற்போதும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாக பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரதீபனுக்கான சிறைத்தண்டனை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ad

ad