புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு
இலங்கையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது ஒரு தடவையில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை ஆயுத படையினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறும் அண்மையில் வெளிவந்த அவுஸ்திரேலிய அறிக்கையை
இலங்கை இராணுவம் நிராகரித்தது.
இந்த அறிக்கை ஆதாரமற்றது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.
நேரில் கண்ட சாட்சியத்தின் ஆவணங்களின் உண்மைத் தன்மை பற்றியும் இவ்வாறான கூட்டுப் புதைகுழி போன்ற யுத்தக் குற்ற ஆதாரங்களை இராணுவம் அகற்றியதாக கூறப்படுவது பற்றியும் அவர் தனது சந்தேகங்களை வெளியிட்டார்.
மக்கள் குடியேறியுள்ள கிராமங்களிலுள்ள எலும்புக் கூட்டு எச்சங்களை தோண்டியெடுத்து அகற்ற எம்மால் முடிந்திருக்குமா என இராணுவ பேச்சாளர் கேள்வி எழுப்பினார்.
வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது பீரங்கி தாக்குதல்கள், வல்லுறவு, சித்திரவதை, பாலியல் வன்முறை, சரணடைந்த தமிழ் புலி போராளிகளை கொலை செய்தமை போன்ற சாத்தியமான யுத்த குற்றங்கள் தொடர்பாக சாட்;சியங்கள் கூறியதை அவுஸ்திரேலியாவின் பொதுநல பரப்புரை மையம் என்ற தொண்டு நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் விபரித்திருந்தது.
யுத்தக் குற்றம் நடந்ததாக கூறப்படுவதை விசாரிக்குமாறு கொழும்புக்கு புதிய அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிறுவன ஒழுங்கமைப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் சிரேஷ்ட இராணுவ தளபதிகளும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் குற்றவாளிகளாக காணப்படலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad