புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


மனைவிகளை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் போலிஸ் எட்டு விஷம் குடித்து தற்கொலை 
கோவையை அருகிலுள்ள தொண்டாமுத்தூர் பக்கமுள்ள நரசீபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோவை பேரூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.


இவர் தனது முதல் மனைவி சுமதி, இவரும் மகளீர் காவலராக பணியில் உள்ளார். கடந்த சில ஆண்டுகுள்ளு முன்பாக முதல் மனைவி சுமதியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ஸ்ரீலதா என்ற பெண்ணை ராஜ்குமார் திருமணம் செய்துகொண்டார்.


காவலர் ராஜ்குமார் இரண்டவது மனைவி ஸ்ரீலதாவுடன் நரசீபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். ராஜ்குமார் வீட்டின் அருகே ஆனந்தன் என்பவர் குடியிருந்து வருகிறார்.


ஆனந்தனின் மனைவி கவுசல்யா. இவர் பக்கத்து வீடு என்பதால் ஏட்டு ராஜ்குமாருடன் சாகசமாக பழகி வந்துள்ளார். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் ராஜ்குமாருக்கும் கவுசல்யாக்கும் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டது.


காலப்போக்கில், ராஜ்குமார்-கவுசல்யா இருவருக்கும் இடையில் “கூடா நட்பு” உருவானது. ஏற்க்கனவே உள்ள இரு மனைவிகளையும் விட்டுவிட்டு கள்ளக்காதல் ஜோடியான ராஜ்குமார்– கவுசல்யா இருவரும் ஆழியாறு சென்றனர்.


வால்பாறை, சோலையாறு, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று மாலை பொள்ளாச்சி திரும்பினர். அங்கு மார்க்கெட் ரோட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
சிறிது நேரத்தில் ராஜ்குமார் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது விவாகரத்தான முன்னாள் மனைவி சுமதி அங்கு நின்று கொண்டிருந்தார். அவரிடம் ராஜ்குமார் வாக்குவாதம் செய்துள்ளார்.


இதையெல்லாம், கண்டுகொள்ளாத சுமதி ஏட்டு ராஜ்குமாரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவமான மடைந்த ஏட்டு ராஜ்குமார் ஆத்திரமடைந்து ‘நாளை என்ன நடக்கிறது பார்’ என்று கூறிவிட்டு லாட்ஜில் அவர் எடுத்திருந்த அறைக்கு திரும்பியுள்ளார். பின்னர், சுமதியும் அங்கிருந்து கோவைக்கு கிளம்பி சென்று விட்டார்.


முதல் மனைவி வாசலில் வந்து திட்டியதால் மனவேதனையடைந்த ராஜ்குமார் லாட்ஜூக்கு திரும்பியதும், கள்ளக்காதலி கவுசல்யவுடன் சேர்ந்து மதுவில் விஷம் குடித்துள்ளனர்.


காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் கொண்ட லாட்ஜ் நிர்வாகிகள் பொள்ளாச்சி நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷம் குடித்துவிட்டு மயங்கிக்கிடந்த இரண்டு பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி கவுசல்யா இன்று மாலை பரிதாபமாக இறந்தார்.
அபாய கட்டத்தில் உள்ள போலிஸ் ஏட்டு ராஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ad

ad